Thursday, November 13
Shadow

பேய் இல்லாமல் ஒரு ஹரார் படமாக வெளி வருகிறது சுந்தர்.C நடிக்கும் இருட்டு

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டேய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன தயாரிப்பில் சுந்தர் சி மற்றும் துரை வி.ஜி இணையும் இருட்டு படத்தின் பாஸ்ட் லுக் வெளியானது. இது பேய் இல்லாத ஒரு ஹரார் படமாக இருக்கும்.

ஹரார் காமடி படங்களை அளித்து வரும் இந்த நிறுவனம், முதல் முறையாக பேய் இல்லாத ஒரு ஹரார் படமாக இருக்கும். சுந்தர் சி முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இருட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த் படத்தை துரை வி.இசட் இயக்குகிறார். இந்த் படம் ஹரார் படமாக இருந்த போதும் இதில் காமெடி டிராக்கும் கலந்தே இருக்கும். மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள திருப்புமுனைகள், ரசிகர்களை உறைய வகையில் இருக்கும்.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் துரை வி.இசட், இந்த படம் வழக்கமான படங்களில் இருந்து ஒரு வேறுபட்ட படமாகவும் இருக்கும். பேய் இல்லாமல் ஒரு ஹாரர் படம் என்பதால், படத்தின் கதையை பல்வேறு வகைகளில் ஷேப் செய்துள்ளோம். இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

படத்தின் 85 சதவிகித ஷூட்டிங் ஏற்கனவே நிறைவு பெற்று விட்ட நிலையில், ஊட்டியில் சிங்கிள் ஷூட்டாக 40 நாட்கள் நடந்து. இன்னும் சில பாகங்கள் நிறைவு பெற வேண்டி உள்ள நிலையில் எஞ்சிய காட்சிகள் ஹைதராபாத் மற்றும் சூரத் பகுதிகளில் படமாகப்பட உள்ளது.

இந்த் படத்திற்கான இசையை கிரீஸ் அமைக்க, சிநிமாட்டோகிராப்பி பணிகளை இ. கிருஷ்ணசாமியும், எடிட்டிங்கை ஆர். சுதர்சன் ஆகியோரும் கையாண்டு வருகிறார். ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்டை ஏகே முத்து, சாரதி (ஸ்டீல்ஸ்), பிகே விருமாண்டி(டிசைன்கள்) மற்றும் எபிவி மாறன் (எக்ஸ்கியூட்டிவ் புரோடிசர்) மற்றும் தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

துரை வி.இசட், இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டேய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்த படத்தை தயாரிகிறது.