
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி
ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் 'கேப்மாரி' என்ற சமீபத்திய படம் ஒன்றில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும்...