‘தனயன்’ படத்தில் குத்தாட்டம் போடும் மிஸ் மும்பை அழகி
ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் படம் ‘தனயன்’.
தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது எனவும் மனித ஒழுக்கத்தை சொல்லும் திரைப்படம் ‘தனயன்’.
இதில் இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே, இந்து, கீர்த்தனா, திலகவதி, வேணி, கானா பிரபா, சித்திரம் பாட்ஷா மற்றும் வில்லன் வேடத்தில் அமீத் ஆகியோர் நடிக்கின்றனர். மிஸ் மும்பை ஏஞ்சல் சிங் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
U.K.முரளியின் இசையில் 3 பாடல்களும், 4 சண்டை காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது.
இந்த படத...