வீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்…! அதுதான் நடந்திருக்கிறது
நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது - அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு.
அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் - உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும்...