
விதி மதி உல்டா – விமர்சனம்
சென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தர மறுக்கிறார். இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன்.
இதற்கிடையில், நாயகி ஜனனி ஐயரை சந்திக்கும் ரமீஸ் ராஜா, அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை ஜனனியிடம் சொல்ல, முதலில் மறுக்கும் அவர் பின்னர் ரமீஸ் ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. இவரது ஒரே தம்பி, ஜனனி ஐயரை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரது காதலை ஜனனி ஏற்காததால் ஆட்களை வைத்து கடத்தி, ஒரு பாழடைந்த கம்பெனியில் அடைக்கிறார்கள். அதேநேரத்தில், ரமீஸ் ராஜாவும் சென்ட்ராயனால் கடத்தப்பட்டு, ஜனனி இருக்கும் அதே இடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
அதுபோல் திருடனான கருணாகரன், தான் திரு...