
ஜப்பான் – திரைவிமர்சனம் ( சரவெடி ) Rank 3.5/5
ஜப்பான் - திரைவிமர்சனம் ( சரவெடி ) Rank 3.5/5
ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூ முருகன் இதுவரை பயணித்த வழியில் இருந்து மாறுபட்டு கமர்சியல் காலத்தில் நம்மை அசத்த வந்து இருக்கிறார். கமர்சியல் காலத்துக்கு ஏற்ப கார்த்தி , அனு இமானுவேல் ஜித்தான் ரமேஷ் சந்திரசேகர் சுனில் கே.எஸ்.ரவிக்குமார் விஜய் மில்டன் மற்றும் பலர் நடிப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் தீபாவளி கொண்டாட்டமாக திரைக்கு இன்று வந்திருக்கும் படம் தான் “ஜப்பான்”.
சில வருடங்களுக்கு முன் திருச்சியில் பெரும் நகைக்கடை ஒன்றில் மிகப்பெரும் திருட்டு ஒன்று அரங்கேறியது. சுவற்றில் துளையிட்டு பல கோடி மதிப்புள்ள நகைகளை திருடர்கள் திருடிச் சென்றார்கள்.
அச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காவல்துறைக்கு மிகவும் சவாலாக இருந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முருகன் என்பவனை கைது செய்தது. அதன்பின்...