“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்
போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டே ‘சிக்மா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு போதைப் பொருளையும் படத்தின் மூலம் விளம்பரப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகை பரியா அப்துல்லா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை முதலில் சந்தித்த தயாரிப்பாளர் தமிழ்குமரன், “சிக்மா திரைப்படம் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துள்ளது. ஜேசன் சஞ்சய் இந்தப் படத்திற்காக மிகவும் உழைத்துள்ளார். இனி இது எங்களுடைய ‘சிக்மா’ மட்டுமல்ல, உங்கள் ‘சிக்மா’” என்றார்.
...



