சூர்யாவுடன் மோதலை நிறுத்திய ஜெயம்ரவி
ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி, அரவிந்த்சாமி ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் லக்ஷ்மன்இயக்கத்தில் இம்மன் இசையயில் மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.
பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று முன் தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைதொடர்ந்து படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அன்று சூர்யாவின் S3 படம் திடீர் என்று வரும் 23ம் தேதி வெளியாகிறது என்ற செய்தி வந்ததால் தற்போது போகன் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....