
தமிழனுக்கும் தமிழ் மொழியின் சிறப்பு தான் “சங்கமித்திரா”
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா' படக்குழு, அந்த விழாவில் பங்கேற்பவர்கள் அறியும் விதமாக படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம், சங்கமித்ரா என்னும் பதுமையை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சங்கமித்ரா என்ற அழகி, அவளது ராஜ்ஜியத்தை காப்பா...