
தல 59 படத்தில் பிரபல ஹிந்தி நடிகை மகள் இணைகிறார்
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், பிங்க் ரீ-மேக்கில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார்.
இப்படத்தில், ஒரு மகள் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரை நடிக்க வைக்க, படத்தின் தயாரிப்பாளரான அவரது அப்பா போனிக் கபூர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான ஹிந்தி படம் 'தடக்'. இந்தப் படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதேப்போல் ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நடிகை ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசையாம்.
இதையடுத்தே, நடிகர் அஜித்துடன் இணைந்து, பிங்க் இந்திப் படத்தின் மொழி மாற்றப்படமான 'தல 5'9ல், போனிக் கபூரை நடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அஜித்துடன் இணைந்தால், ஒரு வெற்றிப்படம் கிடைக்கும் என்பதோடு, ஸ்ரீதேவியின் ...