காஜலால் வாழ்கையில் எல்லாம் போனது புலம்பும் நடன இயக்குநர் சாண்டி!
ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றும் சாண்டி, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த வாரம் சில்வியா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட சாண்டிக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான காஜலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டா சாண்டி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இதற்கிடையே, சில்வியா உடனான அவரது திருமணம் கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இதற்கிடையே, சாண்டியும், அவரது மனைவி சில்வியாவும் இணைந்து டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது முன்னாள் மனைவி காஜல் குறித்து அவரிடம் கேட்டதற்கு, முதல் மனைவியை பற்றி என்னிடம் கேட்காதீங்க, முதல் மனைவி மற்றும் கடந்த கால வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன்.
நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன், நிறைய அழுதுவிட்டேன் இனி எ...