சிறைக்குள் புகுந்த மர்மம்! சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல்
சிறைக்குள் புகுந்த மர்மம்! சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல்
சாதாரண குற்றக் கதைகளின் எல்லைகளை முறியடிக்கும் விதமாக, புதுமையான கதை சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’, வரும் ஏப்ரல் 10 முதல் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது.
“குற்றவாளி தப்பிப்பது அல்ல… யாரோ ஒருவர் சிறைக்குள் புகுவது!” — இந்த ஒரே வரி தான் ‘காக்கி சர்கஸ்’ சீரிஸின் மையக் கருவை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. அமைதியான கடற்கரை நகரத்தில் நடக்கும் இந்த விசித்திர சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையாக தலைகீழாக மாற்றுகிறது.
புத்தகங்களில் மூழ்கி வாழும் ஒரு ஜெயிலரும், எதிலும் அதிக ஆர்வம் காட்டும் ஒரு கான்ஸ்டபிளும் இணைந்து இந்த புதிரை தீர்க்க முயல்கிறார்கள். ஆனால், அவர்களை விட ஒரு படி முன்னிலையில் இருக்கும் மர்ம நபர், இந்த குழப்பத்தை உருவா...
