
காலா விஷயத்தில் சொன்னதை செய்த தனுஷ் ஆச்சிரியத்தில் கோலிவுட்
காலா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மஹிந்திரா ஜீப்பில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார் ரஜினி. அந்த ஜீப்பை தனக்கு தருமாறு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.
காலா தயாரிப்பாளரான தனுஷூம் தருவதாக பதில் டுவீட் போட்டிருந்தார். இந்நிலையில், தற்போது காலா படம் வெளியாகியிருப்பதை அடுத்து அந்த மஹிந்திரா ஜீப்பை, அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கே பரிசாக கொடுத்துள்ளார் தனுஷ். அதையடுத்து ஆனந்த் மஹிந்திரா தனுசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சென்னையிலுள்ள மஹிந்திரா நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த ஜீப்பில் பலரும் அமர்ந்து போட்டோ எடுத்து செல்கின்றனர்....