சரியான நேரம் வந்தவுடன் மக்களுக்கு நல்லது நடக்கும் – ரஜினி
கட்சி தொடங்க நேரம் வந்தால் மக்களின் ஆதரவுடன் தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த விழாவில் அரசியல் குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு வந்த ரஜினி பேசுகையில், இமயமலைக்கு நான் செல்வதே கங்கையை பார்க்கத்தான்.
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைத்துவிடிவதுதான். இது முடிந்த பிறகு நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. நல்லவனாக இருக்கலாம் . ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்ககூடாது என்பதை கற்றுக் கொண்டேன்.
லிங்கா படம் கொஞ்சம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறின...
