
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...