
நான் திமிரு பிடிச்சவன் தான் – விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான `அண்ணாதுரை' படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற நிலையில், கிருத்திகா உதயநிதி நடிப்பில் விஜய் ஆண்டனி நடித்து வந்த `காளி' படத்தின் படப்பிடிப்பும் கடந்த திங்களுடன் நிறைவு பெற்றுள்ளது.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த பட போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்க இர...