Monday, April 28
Shadow

இசை வெளியீட்டில் புதிய முயற்சியை மேற்கொள்ளும் விஜய் ஆண்டனி

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘காளி’. இப்படக்குழு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. ‘காளி’ படத்திற்காக சிறந்த டியூன்களை விஜய் ஆண்டனி தந்துள்ளார் என கூறப்படுகிறது.

‘காளி’ படத்தின் ‘அரும்பே’ பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார். இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ‘அரும்பே’ பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவுன்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்தில் தயாராகவுள்ளது. இந்த ‘அரும்பே’ பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ”விஜய் ஆண்டனி இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகாவுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான் முதல் முறை. இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி மிகவும் அசத்தலான பாடல்களை தந்துள்ளார்.

இசையமைப்பாளராக அவர் தந்துள்ள அருமையான பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். என்னை கவர்ந்த அவரது சிறந்த பாடல்களில் இப்பட பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். விஜய் ஆண்டனியும், கிருத்திகாவும் எனக்கு தந்த சுதந்திரம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனது வரிகளை படித்ததும், விஜய் ஆண்டனி எனக்கு போன் செய்து பாராட்டினார். இந்த பாடலும் இந்த படமும் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களால் நிச்சயம் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும் என நான் நம்புகிறேன்” என்றார்.

‘காளி’ படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நடிகர்கள் யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன் மற்றும் சித்ரா லக்ஷ்மன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply