Sunday, June 21
Shadow

Tag: #KajalAggarwal

அடுத்தடுத்து கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் – இப்போ இவரா?

அடுத்தடுத்து கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் – இப்போ இவரா?

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காஜல் அகர்வால் - நடிகர் ராணா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ‘நீனே ராஜு நீனே மந்திரி’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் மறுத்தனர். பின்னர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடனும் காஜல் அகர்வால் இணைத்து பேசப்பட்டார். தற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் வந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அவரை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அதனை காதல் அகர்வால் மறுத்துள்ளார்....
நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

நயன்தாராவை ஓவர்டேக் செய்த ஓவியா

Latest News, Top Highlights
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை முந்தி ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். தனியார் பத்திரிகை ஒன்று 2017-ஆம் ஆண்டின் விரும்பப்பட்ட பெண் யார் என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதல் முடிவு தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நடிகை ஓவியா முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2017-ல் 3 வெற்றிப்படங்களை கொடுத்தும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமாகிவிட்டார். அவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறது. ஓவியா, நயன்தாராவை தொடர்ந்து 3-வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், 4-வது இடத்தில் ஷ்ரத்தா சசிதரும், 5-வது இடத்தில் காஜல் அகர்வாலும், 6-வது இடத்தில் ஏமி ஜாக்சனும், 7-வது இடத்தில் ஆண்ட்ரியாவும், 8-வது இடத்தில் சஞ்சனா நடராஜனும், 9-வது இடத்தில் ரூஹி ச...
மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது. விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக ‘மெர்சல்’ 100 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சா...
இந்தியாவிற்கு இது மிகவும் அவசியம் – நடிகை காஜல் அகர்வால்

இந்தியாவிற்கு இது மிகவும் அவசியம் – நடிகை காஜல் அகர்வால்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் காண்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். நடிகை சன்னி லியோன், ராக்கி சாவந்த் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் காண்டம் விளம்பரங்களில் நடித்தும், அதுகுறித்து அடிக்கடி புகார்கள் தெரிவித்தும் வந்தனர். அதேநேரத்தில் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்பு செய்வது தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் காண்டம் விளம்பரத்தை ஒளிபரப்ப முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது. அதில் தொலைக்காட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால், இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்ப வேண்டும். அதை பார்த்தாவது சிலர...
இன்னும் கொஞ்ச நாளில் சினிமாவை விட்டு விலகுவேன் – அஜித் பட நாயகி

இன்னும் கொஞ்ச நாளில் சினிமாவை விட்டு விலகுவேன் – அஜித் பட நாயகி

Latest News, Top Highlights
நடிகர்கள் மட்டுமின்றி சில நடிகைகளும் தொழில் அதிபர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். நடிப்பு நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள். அந்த லிஸ்டில் காஜல் அகர்வாலும் இணையவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, நாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து வேறு தொழில் செய்ய நாயகிகள் தயாராக இருக்க வேண்டும். நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்று நான் சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நடிகைகள் ஏதேனும் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதை தேர்வு செய்து கொள்வதே சிறந்தது. நான் சி...