
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக ‘மெர்சல்’ 100 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.
‘மெர்சல்’ படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், ஹரிஷ் பேரிடி, வடிவேலு, கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.