அப்துல் கலாம் புகழ் சொல்லும் ஜிப்ரான் இசையில் வைரமுத்து வரிகளில் “கலாம் சலாம்”
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் எ...
