
களவாடிய பொழுதுகள் – திரைவிமர்சனம் (காதலுக்கு மரியாதை) Rank 4.5/5
தமிழ் சினிமாவில் நல்ல உணர்வுபூர்வமான கதைகள் கொண்ட படங்கள் என்பது அரிது அதுவும் காதல் கதைகள் என்பது மிக மிக அரிது அனால் நல்ல கதைகளையும் தமிழ் மண் கலாசாரத்தையும் மையபடுத்தி ஒரு இயக்கோர் படம் எடுக்கிறார் என்றால் அது இயக்குனர் தங்கர்பச்சான் நீண்ட இடைவெளிக்கு பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தான் களவாடியபோழுதுகள்.
மனதை நெருடும் காதல் கதை மனதை மட்டும் இல்லை நம் உணர்வுகளுக்கு மரியாதை செய்யும் ஒரு காதல் கதை தமிழ் கலாசாரத்தையும் தமிழ் காதலையும் பறைசாற்றும் படம் தான் இந்த படம் என்று சொல்லணும் இன்றய மலிந்து போன காதல் கதை இயக்குனர்கள் எல்லோரும் ஒருமுறை இந்த படத்தை பாருங்கள்
அதேபோல காதல் என்ற அர்த்தம் இல்லாமல் இன்று காதலிக்கும் ஆண் பெண் அனைவரும் பார்க்கவேண்டிய படம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மனதை இகவும் வருடியதொடு இரவு தொக்கதையும் கெடுத்தது என்று தான் சொல்லு...