Wednesday, April 30
Shadow

களவாடிய பொழுதுகள் – திரைவிமர்சனம் (காதலுக்கு மரியாதை) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் நல்ல உணர்வுபூர்வமான கதைகள் கொண்ட படங்கள் என்பது அரிது அதுவும் காதல் கதைகள் என்பது மிக மிக அரிது அனால் நல்ல கதைகளையும் தமிழ் மண் கலாசாரத்தையும் மையபடுத்தி ஒரு இயக்கோர் படம் எடுக்கிறார் என்றால் அது இயக்குனர் தங்கர்பச்சான் நீண்ட இடைவெளிக்கு பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தான் களவாடியபோழுதுகள்.

மனதை நெருடும் காதல் கதை மனதை மட்டும் இல்லை நம் உணர்வுகளுக்கு மரியாதை செய்யும் ஒரு காதல் கதை தமிழ் கலாசாரத்தையும் தமிழ் காதலையும் பறைசாற்றும் படம் தான் இந்த படம் என்று சொல்லணும் இன்றய மலிந்து போன காதல் கதை இயக்குனர்கள் எல்லோரும் ஒருமுறை இந்த படத்தை பாருங்கள்

அதேபோல காதல் என்ற அர்த்தம் இல்லாமல் இன்று காதலிக்கும் ஆண் பெண் அனைவரும் பார்க்கவேண்டிய படம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மனதை இகவும் வருடியதொடு இரவு தொக்கதையும் கெடுத்தது என்று தான் சொல்லுனும் இயக்குனர் தங்கர்பச்சானை தலைவைத்து கொண்டாட தோன்றுகிறது அப்படியான ஒரு படம் என்று சொன்னால் மிகையாகாது

இதில் அவர் காதலை மட்டும் சொல்லவில்லை ஒரு மனிதனின் தன் மானம் சுயசிந்தனை பணத்துக்காகவும் பதவிக்காகவும் நம் மரியாதையை எப்பவும் விட்டு விடக்கூடாது என்ற கருத்தை காதலோடு கலந்து கொடுத்து இருக்கிறார்

இந்த விஷயம் முன்னாடியே உங்களுக்கு தெரிஞ்ச விசயமாத்தான் இருக்கும்.. ஆனா இப்போ நினைவுப்படுத்துவது அவசியம.

ஒரு ஞானியிடம் சீடன், காதலுக்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்??-என்று கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “ம்ம் செல்கிறேன். முதலில் நீ அந்த ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது ரொம்ப அழகான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதிலிருந்து ஒரு ரோஜாவைக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் கவர்ந்த ரோஜா??” என்று கேட்டார்.

சீடன் சொன்னான், “குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு அழகானச் செடி என்னைக் கவர்ந்தது. அதை விட அழகானச் செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் பியூட்டியான ரோஜாச் செடிகள் கண்ணில் தென்பட்டன. அடடே.. அப்படியானால் அவற்றை விட அட்டகாசமான பிரியமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். ஆனால் அதன் பிறகு தென்பட்டதெல்லாம் மிகச்சாதாரணமான ரோஜாச் செடிகளே. ஆனால் ரோஜாவுக்காக வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்று நீங்கள் சொன்னதால் ஆரம்பத்தில் பார்த்த அழகான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.”

புன்முறுவலோடு ஞானி சொன்னார்,

“இது தான் காதல்..!!”

பின்னர் ஞானி, “சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், “இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..??”

சீடன் சொன்னான், “இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை”.
இப்போது ஞானி சொன்னார்,

“இது தான் கல்யாணம் ..!! – என்றார்- இதனை ஜென் கதை என்கிறார்கள். இந்த சமாச்சாரம் உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்த கதை மாதிரிதானே தெரிகிறது.. அப்படித்தான் உணர்வைத் தருகிறது நண்பன் தங்கர்பச்சான் வழங்கும் ‘களவாடிய பொழுதுகள்’திரைப்படம். ஒரு சம்பவத்தை அல்லது அல்லது செயலை பார்த்தவுடன் நம் வாழ்வில் நடந்த ஏதோவொரு நிகழ்வை நினைக்க தோன்றுவதுதானே படைப்பு. அப்படியோர் படைப்புதான் ‘களவாடிய பொழுதுகள்’.அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது.

சமீப காலமாகவே பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைவது அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதாவது நம்மில் பலரும் பணப்பொருத்தமும், ஜாதகப் பொருத்தம், குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள். ஆனால் மனப்பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். குறிப்பாக படிப்பு, அறிவு, அழகு, பொழுதுபோக்கு, வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை, கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு. அன்பு ஆதரவு இல்லாத உறவுகள், சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன.

மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் மிக அழகாக அம்பலப்படுத்திக் காட்டுகிறார் தங்கர்பச்சான். எப்படி? அப்படியா? என்று கேள்வி கேட்காமல் படத்தைப் பாருங்கள்.. உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் படத்தில் இல்லை என்றால் டிக்கெட்-டுக்கு கொடுத்த பணத்தை தங்கர்பச்சானிடமிருந்து வாங்கித் தர நான் பொறுப்பு.

ஆம்.. படத்தின் கதை என்னவென்று கேட்டு அதைச் சொன்னால் விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையை சொல்லும் கம்மனாட்டி என்று கத்துவார் தங்கர்பச்சான் என்பதால் இந்த படம்தான் தற்போதைய காதலுக்கு மரியாதை _ பார்ட் டூ என்று வேண்டுமானாலும் குறிப்பிடலாம். அப்படி சொன்னால் இயக்குநர் கூட ஸ்மைல் செய்வார். மேலும் இந்தப் பார்த்து விட்டு நீங்களும் புன்னகையுடன் கொஞ்சம் பிளாஷ் பேக் சிந்தனையுடன் தான் வெளியில் வருவீர்கள்..அதிலும் காதலர்களிக்கிடையே உள்ள, இருக்க வேண்டிய கண்ணியத்தை மிக அழகாகக் காட்டி மனசை பிசைய வைக்கும் விதத்தில் உருவாக்கி இருக்கிறார்.. பாடல்கள் குறிப்பாக சேரன் இங்கே.. சோழன் இங்கே பாடல் பாட்டை முணுமுணுத்தப்படியே வெளியேற ரசிகர்கள் அதிகம்,

Leave a Reply