அரசியலில் மாற்றம் வேண்டும் என்றால் இதை தான் செய்யனும் கமல்ஹாசன்
அரசியலில் மாற்றம் ஏற்பட வணிகத் துறையை மற்ற துறைகளுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் ஆவர்.
அவர்களுடைய உரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் தேவையின்றி கடையடைப்பு செய்ய மாட்டோம் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கிராமசபைக் கூட்டத்தில் வணிகர்கள் அனைவரும் பெருமையுடன் பங்கேற்க வேண்டும். கிராமசபை என்பது நான் கண்டுபிடித்தது அல்ல; தங்களுக்கு நினைவுபடுத்தியது மட்டுமே.
ஆண்டுக்கு 4 நாட்களாவது கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது அவசியம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறையுடன் வணிகத் துறைய...