
சென்னையில் நடிகர் கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை இன்று அவரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். விமான நிலையத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாசன் கெஜ்ரிவாலை வரவேற்றார்.
டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார்.
அரசியல் கற்கும் கமல்
இந்த நிலையில்தான், கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அம்மாநில அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவ...