
‘தமிழ்நாட்டை தனிநாடா மாத்திடாதீங்க..’ – கமல் வேண்டுகோள்
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார்.
சில தினங்களில் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா.
இதனிடையில் தன்னுடையை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஓபிஎஸ், திடீரென தான் மிரட்டப்பட்டதால் ராஜினாமா செய்ய முன்வந்தேன் என்றார்.
இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்தது.
இதனால் தமிழ்நாடே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய கருத்துக்களை சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இது தொடர்பான அவரின் ட்விட்டர் கருத்துக்கள் இதோ…
Kamal Haasan @ikamalhaasan
We’ve wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let’s stop blaming them Lets become incorruptable.
பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் ச...