
மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் கமல்ஹாசன்
வாய் சொல்லில் வீரனடி என்று இருக்காமல் செயலிலும் நான் வீரன் என்று அரசியலுக்கு வந்தவர் கமல்ஹாசன் அதுவும் இன்று மக்கள் போராடும் ஒவ்வொரு பிரச்னைகளை பார்த்து மக்களுக்காக போராட களம் இறங்கும் கமல்ஹாசன் இன்று தன அரசியல் பயணத்தை துவங்கினார் அதுவும் அப்துல் கலாம் அவர்கள் வீட்டில் இருந்து போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம்
அப்துல் கலாம் நினைவிடத்திற்கு மக்கள் வெள்ளத்தின் நடுவே மிதந்து சென்றார் நடிகர் கமல்ஹாசன். தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கிய கமல்ஹாசன், இதையடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்பிறகு பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார். அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார்
இதைத்தொடர்ந்து மதுரை நோக்கி புறப்பட்டார் கமல்ஹாசன். மதுரைக்கு செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார். ம...