
அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் – கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன்
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினியோ அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி தொடங்குவது குறித்து தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். கமலால் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம்....