ஓட்டுக்காக கிராமங்களை தேடி வரவில்லை கமல்ஹாசன் ஆவேசம்
கிராம சபை கூட்டத்தை காணவும், தத்தெடுக்கப்பட்ட அதிகத்துார் கிராமத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்யவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், நேற்று அங்கு சென்றார்.
அதிகத்துார் கிராம மக்கள் மத்தியில், கமல் பேசியதாவது: இந்த கிராமத்தில் உள்ள, அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது, என் கடமை. அரசு செய்ய முடிந்ததை, தனிக் கூட்டம் செய்ய முடியும் என்பதை காட்டப் போகிறோம். அதனால் தான், 12 ஆயிரத்து, 500 கிராமங்களையும் தத்தெடுக்கவில்லை; எட்டு கிராமங்களை மட்டுமே தத்தெடுத்துள்ளோம்.
உங்கள் உதவி இருந்தால், 12 ஆயிரத்து, 500 கிராமங்களிலும் பொறுப்பேற்கும் நாளும் வரும். நான், இங்கே உடனே செய்யக்கூடியதை மட்டும் சொல்கிறேன். பள்ளிக் கூடத்திற்காக, மூன்று அறைகள் கட்டித் தரப்படும். கல்விக்கு நிகரான ஆரோக்கியத்திற்காக, 100 கழிப்பறைகள் கட்டித் தரப்படும். விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பமாகும். கிர...

