
திகில் கிளப்பும் காஞ்சனா 3 ட்ரைலர் விமர்சனம்
காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது. இந்த டிரைலர் வழக்கமான திகில் பட டிரைலரை போன்று இல்லாமல் மிகவும் மிரட்டாலக வந்துள்ளது, தொடக்கத்திலேயே நில ஒளியில் கேட்டை ஒன்று காட்டப்படும் காட்சிகளே மிரட்டலாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு ரத்த கறையுடன் கூடிய கை, தனியாக ஒரு நாற்காலி இருப்பது போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டு வகையில் உள்ளது. கோவில் முன்பு ஒரு கார் வெடித்து சிதறுவது, அதை தொடர்ந்து பேய் சோபாவில் பறந்து வருவது மிரட்டலில் உச்சமாகவே இருக்கிறது. அதை தொடர்ந்து வரும் காட்சிகள் திகிலை கில்ப்புவதுடன், மாந்திரிக காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாகவே உள்ளது. காளி சிலை அதை தொடர்ந்து வரும் ராகவா லாரன்ஸ் பாடல் காட்சியில் மாடு, குதிரைகள் வீட்டை உடைத்து உள்ளே வரும் காட்சிகள் அதை தொடர்ந்த சண்டைகாட்சிகள் முழுமையான பேய் படம் என்பது உணர்த்தும் வகையில் உள்ளத...