
திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் “கண்ணாடி”
திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. தனது மூன்றாவது படமாக சந்தீப் கிஷன், ஆன்யா சிங் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கண்ணாடி’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே நாயகன், நாயகி தவிர மற்ற அனைத்து நடிகர்களுமே மாறியுள்ளனர். தமிழில் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெண்ணிலா கிஷோர், பூசாணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (நவம்பர் 23) விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ட்விட்டர் பக்கத்தில் பலரும் போஸ்டரின் வடிவமைப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கில் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சந்தீப் கிஷன். இதற்கு ‘Ninu Veedani N...