Thursday, December 7
Shadow

Tag: #kanniraasai #vemal #varalakshmi #pandiyaraj #shamem ibhrhim #yugabharathi #roboshankar #yogibabu #muthukumaran #vishalchandrasekar

விமல் மற்றும் வரலக்ஷ்மி நடிக்கும் கன்னிராசி

விமல் மற்றும் வரலக்ஷ்மி நடிக்கும் கன்னிராசி

Latest News, Top Highlights
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார். பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர். இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ...