பெண் இயக்குனர் நூர்ஜஹான் அறிமுகமாகும் அபிசரவணன் நடிக்கும் “கரிக்காட்டுக் குப்பம்“
ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் படத்திற்கு “ கரிக்காட்டுக் குப்பம் “ என்று பெயரிட்டுள்ளனர். பெண்கள் இன்று அடுப்பங்கரையை விட்டு புதிய சிந்தனைகளுடன் எல்லாத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முஸ்லீம் பெண்கள் பல்துறை வித்தகர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த “ கரிக்காட்டுக் கும்பம் “ உருவாகிறது. சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவது தான் இந்த கரிக்காட்டுக் குப்பம் “ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டு “ கரிக்காட்டுக் குப்பம் “ உருவாகிறது.
அபி ...
