கார்த்தியின் அடுத்த அதிரடி கூட்டணி! தமிழ் – தெலுங்கு மார்க்கெட்டை குறிவைக்கும் கார்த்தி 30
கார்த்தியின் அடுத்த அதிரடி கூட்டணி! தமிழ் - தெலுங்கு மார்க்கெட்டை குறிவைக்கும் கார்த்தி 30
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் நடிகர் கார்த்தி, தற்போது புதிய கூட்டணியுடன் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். வித்தியாசமான கதைகள் மற்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் கார்த்தி, இம்முறை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்திருப்பது திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்த புதிய தமிழ் - தெலுங்கு இருமொழி திரைப்படத்தை இளம் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்குகிறார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், தற்போது முக்கியமான காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின...
