வீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார். அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கார்த்தி கூறியதாவது :- பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நட...
