
நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்…
கடந்த சில நாட்களில் 'கடைக்குட்டி சிங்கம்' என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.
தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன நடிகர் கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.
நடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையா...