தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்!
கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரெமையா நடுவர்களாக களம் இறங்கும் ‘Tamil Idol’ – 14 முதல் 30 வயது வரையிலான இளம் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்து கிடக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் புதிய இசைத் தேடல் நிகழ்ச்சியாக ‘Tamil Idol’ உருவாகிறது. இந்திய அளவில் பிரபலமான ‘Indian Idol’ நிகழ்ச்சி முதன்முறையாக தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவில் களமிறங்குகிறது.
தமிழகத்தின் அடுத்த தலைமுறை சிறந்த பாடகரைத் தேடும் இந்தப் பயணத்தில், இசையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கார்த்திக், பென்னி தயாள் மற்றும் நடிகை-பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். தங்களது நீண்டகால இசை அனுபவத்தின் மூலம் போட்டி...
