
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்!
கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரெமையா நடுவர்களாக களம் இறங்கும் ‘Tamil Idol’ – 14 முதல் 30 வயது வரையிலான இளம் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்து கிடக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் புதிய இசைத் தேடல் நிகழ்ச்சியாக ‘Tamil Idol’ உருவாகிறது. இந்திய அளவில் பிரபலமான ‘Indian Idol’ நிகழ்ச்சி முதன்முறையாக தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவில் களமிறங்குகிறது.
தமிழகத்தின் அடுத்த தலைமுறை சிறந்த பாடகரைத் தேடும் இந்தப் பயணத்தில், இசையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கார்த்திக், பென்னி தயாள் மற்றும் நடிகை-பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். தங்களது நீண்டகால இசை அனுபவத்தின் மூலம் போட்டியாளர்களின் குரல் வளம், பாடும் திறன், இசை அறிவு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்க உள்ளனர்.

மூன்று இசை ஆளுமைகள்… ஒரே தேடல்!
‘Tamil Idol’ நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் வெவ்வேறு இசைப் பின்னணியையும் தனித்துவமான அனுபவத்தையும் கொண்டவர்கள். இதனால், புதிய பாடகர்களின் திறமையை பல்வேறு கோணங்களில் மதிப்பிடும் வாய்ப்பு இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.
பாடகர் கார்த்திக் பேசுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான திறமையான பாடகர்கள் இருப்பதாகவும், அவர்களில் இதுவரை பெரிய அளவில் வெளிவராத சிறந்த குரல்களை ‘Tamil Idol’ மூலம் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய பாடகர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்றுவதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ள கார்த்திக், ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் நடைபெறும் இந்த இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பென்னி தயாள் கூறுகையில், ஏற்கனவே பலமுறை ‘Hindi Idol’ நிகழ்ச்சியுடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளை சந்திப்பது தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் படித்து, பல ஆண்டுகள் இங்கு வாழ்ந்திருப்பதால், தமிழ்நாட்டின் பாடகர்களைத் தேடும் ‘Tamil Idol’ நிகழ்ச்சி தனக்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த தலைமுறை பாடகர்களை சந்தித்து அவர்களின் திறமைகளை அறிந்து கொள்வதில் ஆவலாக இருப்பதாகவும் பென்னி தயாள் தெரிவித்துள்ளார்.
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரெமையா பேசுகையில், தமிழர்களின் வாழ்க்கையில் இசை எப்போதும் முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான திறமையான பாடகர்கள் இருப்பதாகவும், அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் இசைப் பயணத்தையும் தனிப்பட்ட கதைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். புதிய குரல்களுக்கு வாய்ப்பளிக்கும் ‘Tamil Idol’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்
‘Tamil Idol’ நிகழ்ச்சியின் முதல் ஆடிஷன் ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் நடைபெறும் இந்த ஆடிஷனில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பாடகர்கள் பங்கேற்க உள்ளனர்.
14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆடிஷனில் கலந்து கொள்ளலாம்.
ஆடிஷன் நடைபெறும் இடம்:
Velammal Vidyalaya Annexure,
Mel Ayanambakkam,
சென்னை.
பெரிய மேடையை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க விரும்பும் இளம் பாடகர்களுக்கு ‘Tamil Idol’ ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைய இருக்கிறது. இதுவரை குடும்பம், நண்பர்கள் வட்டம் அல்லது சமூக ஊடகங்களில் மட்டுமே தங்களது குரலை வெளிப்படுத்தியவர்களுக்கும், இசைத்துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க விரும்புபவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி புதிய கதவுகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்களின் குரல் திறமையை மட்டுமல்லாமல், அவர்களின் தனித்துவம், இசை மீதான புரிதல் மற்றும் மேடைத் திறன் ஆகியவற்றையும் வெளிக்கொண்டு வருவதில் ‘Tamil Idol’ கவனம் செலுத்தும் என தெரிகிறது.
தமிழ்நாட்டின் இசைத் திறமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, அவர்களில் அடுத்த தலைமுறை பாடல் நட்சத்திரத்தை அடையாளம் காணும் இந்த புதிய இசைப் பயணம் விரைவில் ரசிகர்களை சந்திக்கிறது.
‘Tamil Idol’ விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

‘Tamil Idol’ Begins Its Search for Tamil Nadu’s Next Singing Sensation – First Auditions on August 23 in Chennai
Karthik, Benny Dayal and Andrea Jeremiah join the judging panel; the music talent hunt is led by A.R. Rahman
Tamil Nadu is all set to witness a new musical talent hunt as ‘Tamil Idol’ begins its search for the state’s next big singing sensation. Bringing the popular ‘Indian Idol’ format to Tamil audiences for the first time, the show aims to discover fresh and exceptional voices from across Tamil Nadu.
The judging panel brings together three accomplished names from the world of music — singer Karthik, singer Benny Dayal, and actor-singer Andrea Jeremiah. With their diverse musical backgrounds and years of experience, the trio will evaluate aspiring singers while also mentoring and encouraging the next generation of talent.
Three Musical Powerhouses, One Common Mission
Known for his versatile voice and extensive experience in the Indian music industry, Karthik expressed his excitement about being part of the new show.
Speaking about ‘Tamil Idol’, Karthik said that Tamil Nadu is home to numerous talented singers and expressed his hope that the show would help bring many undiscovered voices into the spotlight. He also said that he is looking forward to identifying promising singers and helping them develop their talent. Being part of the musical journey under the leadership of A.R. Rahman is a matter of great happiness for him, he added.
Benny Dayal, who has previously been associated with ‘Hindi Idol’ on several occasions, said that every season gives him an opportunity to witness new and surprising talent.
He expressed his happiness about being part of ‘Tamil Idol’ and the search for talented singers from Tamil Nadu. Having studied in Chennai and lived in the city for several years, Benny said the show holds a special place for him. He is particularly excited to meet and encourage the next generation of singers.
Andrea Jeremiah, who has successfully established herself as both an actor and singer, highlighted the deep connection between music and Tamil culture.
She said music has always held a special place in the lives of Tamil people. With talented singers spread across Tamil Nadu, Andrea expressed her enthusiasm about meeting them, hearing their stories and discovering their individual musical abilities. She also said she is happy to be part of a platform that gives new voices an opportunity to shine.
First Audition to Be Held in Chennai on August 23
The first audition for ‘Tamil Idol’ will be held in Chennai on August 23, under the leadership of music maestro A.R. Rahman.
Singers between the ages of 14 and 30 are eligible to participate in the audition.
Audition Venue:
Velammal Vidyalaya Annexure,
Mel Ayanambakkam,
Chennai.
For aspiring singers who have been waiting for the right platform to showcase their voices, ‘Tamil Idol’ promises to be an important opportunity. The show is expected to bring together young musical talents from different parts of Tamil Nadu and provide them with a platform to showcase not just their vocal abilities, but also their individuality, musical understanding and stage presence.
With three experienced musicians on the judging panel and A.R. Rahman leading the musical journey, expectations are high for the show to uncover fresh voices and potentially introduce the next generation of Tamil singing talent to a wider audience.
‘Tamil Idol’ will be available soon on Sony VIZHA and Sony LIV.
