“விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா’ – நடிக்கும் சுவாரஷ்யமான திரில்லர் கதையாக “465
எஸ்.எல். பிரபு-வின் "எல்.பி.எஸ். பிலிம்ஸ்" தயாரிப்பில், சாய் சத்யம் இயக்கத்தில் "விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ்" பெரியதிரைக்கு வருகின்றார். விஜய் டிவியின் "கனா காணும் காலங்கள்" மற்றும் "ஆபீஸ்" தொடர்களின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றவர் கார்த்திக்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் படத்தின் மூலம் பெரியதிரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார்.
ஒரு சிறந்த நடிகராக அறிமுக இயக்குனர் "சாய் சத்யம்" இயக்கத்தில் 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற படத்தின் மூலம் வருகிறார். வேறு எந்த இயக்குனர்களின் உதவியும் இல்லாமல் தனியாக தன்னை ஒரு இயக்குனராக வளர்த்துக்கொண்டவர் "சாய் சத்யம்". மேலும் அவருடைய சுவாரஸ்யமான திரைக்கதையை "465 (நாலு ஆறு அஞ்சு)" மூலம் சொல்லியிருக்கிறார். நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராட்டிணம் மற...
