கருண் நாயரை பாராட்டும் சென்னை 28 அணியினர்….
500 - 1000 பிரச்சனைகள் மத்தியில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28 - II.... இந்த அணியினர் தற்போது, சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிற்காக மூன்று சதங்களை அடித்து அசத்தி இருக்கும் கருண் நாயரை வாழ்த்தி இருக்கின்றனர்.
"சென்னை - 303' கதாநாயகன் கருண் நாயருக்கு , எங்கள் சென்னை 28 அணியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.....தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களையும் , போட்டிகளையும் சந்தித்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் கருண் நாயர்......எங்களின் சென்னை 28 II படத்தின் வெற்றியும் ஏறக்குறைய அவரை போல தான் இருக்கின்றது.....
மூன்றாவது சதத்தை கருண் நாயர் அடிக்கும் பொழுது, சென்னை சேப்பாக் விளையாட்டு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.....அதே போல் விநியோகஸ்தர் மத்தியிலும...
