பிகினி புகைப்படத்தை வெளியிட்டு திட்டு வாங்கிய கஸ்தூரி
ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக்கின் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு நடிகை கஸ்தூரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி சமீப காலமாகவே டுவிட்டரில் அவரது கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதேபோல் சர்ச்சைக்குரிய பல விஷயங்களையும் பற்றி பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில், என்னுடைய புதுவருட தீர்மானம், என்னுடைய 50 வயதில் நான் ஹாலிவுட் நடிகை சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று, அந்த நடிகையின் பிகினி புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவரது இந்த புகைப்படத்திற்கு சிலர் வரவேற்பு அளித்தாலும், பலரும் உங்களது தீர்மானம் எதுவாக இருந்தாலும், பொது இடத்தில் இப்படி புகைப்படத்தை போட்டு உங்களது மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்களே என்று கேட்டு வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகை நடிகை சல்மா ஹயக்குக்கு தற்போதைய 51 வயதாகிறத...