
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
காற்றின் மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யுலில் முடித்தார் நாயகி ஜோதிகா. ஜூன் 4ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஜூலை 25 ஆம் தேதியோடு தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துக்கொண்டார் ஜோதிகா. தும்ஹாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி. ஹிந்தியில் தேசிய விருது பெற்ற வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார். ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ மொழி “ திரைப்படத்தின் இயக்குனர் ராதாமோகன் தமிழுக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா , விதார்த் , லட்சுமி மஞ்சு , மனோபாலா , குமரவேல் , உமா பத்மநாபன் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று படக்குழுவினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் எல்லோருக்கும் பட்டு சேலை மற...