கவண் படம் எனக்கு ஒரு மிக பெரிய அடையாளம் கொடுக்கும் போஸ் வெங்கட்
மெட்டி ஒலி டீவி சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் போஸ் வெங்கட்.
டீவி சீரியல் மூலம் அறிமுகமான இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஆசிர்வாதத்தில் அவரது ஈரநிலம் படத்தில் வில்லனாக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
தற்போது 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் ரஜினியுடன் சிவாஜி முதல் சூர்யாவின் சிங்கம் வரை அனைத்து பெரிய நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.
சுந்தர் சி யின் நகரம் மற்றும் சிங்கம், சிவாஜி, கோ, யாண் போன்ற படங்களில் மிக முக்கிய பாத்திரங்களில் கவனம் ஏற்படுத்தினார். பல படங்களில் திருப்புமுனை பாத்திரங்களில்
நடித்திருக்கும் இவர் தற்போது வெளியாகியிருக்கும் கவண் படத்தில் முதன்முறை முழுமையான வில்லன் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
சினுமா வாழ்வில் திருப்புமுனையை ஏர்படுத்தியிருக்கும் இந்த பாத்திரம் ரசிகர்களிடம் மட்டுமில்லாது சினிமா த...

