மொபைல் போன்களால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லவரும் ஜீவா நடிக்கும் கீ திரைப்படம்
ஜீவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் கீ. குளோபல் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளள இந்த படம், சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. தற்போது படத்தை வருகிற ஏப்ரல் 12ந் தேதி வெளியிடுகிறார்கள். இதில் அனைகா, ஆர்ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வராகவன் உதவியாளர் காலீஸ் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
மொபைல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் மொபைல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன ?என்பதை எடுத்து...