Friday, November 29
Shadow

Tag: #KeerthanaMarriage

பார்த்திபன் மகளுக்கு, எடிட்டர் மகனுடன் கல்யாணம்

பார்த்திபன் மகளுக்கு, எடிட்டர் மகனுடன் கல்யாணம்

Latest News, Top Highlights
நடிகர் பார்த்திபனுக்கும், நடிகை சீதாவுக்கும் பிறந்த மகள் கீர்த்தனா. இவர் 2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது மணிரத்னமிடம் கீர்த்தனா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படமொன்றை இயக்க இருக்கிறார். இந்நிலையில், கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் அக்‌ஷய். விசுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். இவர் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் ஆவார். கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது....