ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் அதிரடி ஆக்சன் படம் கே.ஜி.எப் சாப்டர் 1 வரும் 21ம் தேதி ரிலீஸ்
தமிழ்திரையில் ஒரு புதிய நாயகன் உதயாமாகிறான். யஷ் கர்நாடக மக்களின் உள்ளத்திலும் உதட்டிலும் ஓங்கி ஒலிக்கும் பெயர்... தற்போது தமிழகத்தில்….”பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ். நடிப்பில் வெளிவரும் படம் K.G.F. Chapter 1
இது K.G.F என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1978-ல் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிபோரால் US-க்கும் சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகியது... அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டி படைத்தது. OIL, COFFEE, STEEL, COTTON இதோட சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ண தொட்டது… 70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில் K.G.F-ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி...