ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தலைமையில் எம்.ஜி.ஆர் பட விழா ஆரம்பம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதற்குள் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. நூற்றாண்டு விழா கண்ட எம்ஜிஆரின் கனவுப் படமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் தற்போது அனிமேஷனில் உருவாகிறது. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் கல்வியாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில் தயாரிக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.
அனிமேஷனில் உருவாகும் இந்த படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார். ...