கோபமா சீமானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்யின் – கோபம்
பாஞ்சாலங்குறிச்சி', 'இனியவளே', 'வீரநடை', 'தம்பி', 'வாழ்த்துகள்' ஆகிய படங்களை இயக்கியவர் சீமான். அதற்குப் பிறகு அரசியலில் கவனம் செலுத்திய சீமான் தற்போது நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படம் இயக்குகிறார்.
முன்னதாக, சீமான் 'பகலவன்' படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு என கதாநாயகர்களின் பட்டியல் மாறிக்கொண்டே வந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இயக்கும் புதிய படத்தை சீமான் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு 'கோபம்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள '4ஜி', 'செம', 'அடங்காதே' மற்றும் 'ஐங்கரன...
