2019 முதல் காலாண்டில் ஹிட்டான டாப் -5 கோலிவுட் படங்கள் வென்றது அஜிதா இல்லை ரஜினியா
2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் சில படங்ககள் வெளியாகி ஹிட்டாகின. அதில் டாப் 5 படங்கள் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளது. வசூல் ரீதியாக அதிகளவில் வசூல் செய்து ஹிட்டான படங்களை வரிசைபடி, சினிமாபிளஸ் நேயர்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். தொடர்ந்து படியுங்கள்...
விஸ்வாசம்: தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை தியேட்டர்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி தல அஜீத்தின் விஸ்வாசம் படம் இதுவரை 65 கோடிக்கு மேலாக தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் நேரடியாக மோதி வெளியான இந்த படம் பாகுபலி 2 மற்றும் சர்க்கார் படங்களில் வசூல்களை எட்டாமல் குறைந்த வசூல் வித்தியாசத்த...