‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் மற்றும் காதலை சொல்லும் படம்!
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம்.
வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் 'கொஞ்சம் கொஞ்சம்'
தன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி.இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு.
இக்கதைக்குள் காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.
இப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர், மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார்.
ஏற்கெனெவே தமிழில் 'விருந்தாளி' படம் இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் திறமைகள் புதுமைகளை ஆதரிக்கவும் ஆராத...
