
கூத்தன் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இளைய திலகம் பிரபு
தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வெளியிட்டார்.தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், கதாநாயகன் ராஜ் குமார், இசையமைப்பாளர் பாலாஜி ஆகியோரை தனது வீட்டில் சந்தித்ததார். தயாரிப்பளர் நீல்கிரீஸ் முருகன் இளைய திலகம் பிரபுவிற்கு பொன்னாடை அணிவிக்க நாயகன் ராஜ்குமார் பூங்கொத்து வழங்கினார். இளைய திலகம் பிரபு, கூத்தன் படம், பட உலகை கதை களமாக கொண்டு உருவாகியுள்ளதை கேட்டு படக்குழுவை பராட்டினார். கூத்தன் படத்தின் விவரங்களை கேட்டறிந்த அவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக உள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ஹீரோ ராஜ்குமார் மிக அழகாக, திறமைவாய்ந்தவராக இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஹிர...